Wednesday, September 11, 2024
Home » பெண் ஐபிஎஸ் அதிகாரி பற்றி தரக்குறைவான பதிவு பெண்கள் மீதான ஆபாச தாக்குதலை ஒடுக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரி பற்றி தரக்குறைவான பதிவு பெண்கள் மீதான ஆபாச தாக்குதலை ஒடுக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவு

by Arun Kumar

சென்னை: பெண்களின் மீதான ஆபாச தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஜோதிமணி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐபிஎஸ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான ஆபாசமான, அருவெறுக்கத்தக்க, ஒரு நாகரிகமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்க முடியாத கமென்ட்டுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு பெண், அவர் காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில், பொது வெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சமூகம் அனுமதிக்க முடியும்? அவரது கணவரை இழிவுபடுத்துவதாக நினைத்து, அவர் குடும்பத்துப் பெண்கள், குழந்தைகள் மீது ஆபாசத் தாக்குதலை, அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்து விடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு காவல் துறை அதிகாரிக்கும், அவர் குடும்பத்திற்குமே இந்த நிலை என்றால் சாதாரண ெபண்களின் நிலை என்ன? இதுபோன்ற இணைய, சமூக ஊடக, ஆபாசத் தாக்குதலால், எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல் துறை பெண்களின் மீதான இதுபோன்ற ஆபாச தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தையே சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்து போய் விட முடியாது.

இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும். தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சக பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களுக்கு எனது அன்பையும், உறுதியான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஜோதிமணி எம்.பி கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

fifteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi