பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேட்கரின் தாய் மனோரமா கேட்கரை மராட்டிய போலீஸ் கைது செய்துள்ளது. புனே அருகே முஸ்லியில் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக மனோரமா மீது பண்டரிநாத் பசல்கர் என்பவர் புகார் அளித்தார். புகாரை விசாரித்த ஊரக காவல்துறை, மனோரமா, பூஜாவின் தந்தை திலிப் கேட்கர், அம்பாதாஸ் கேட்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மனோரமா பயிர் சாகுபடி செய்வதாக கூறி அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் புகாரை அடுத்து மனோரமாவை தேடிவந்த போலீசார், மகத் என்ற ஊரில் அவரை கைது செய்துள்ளனர்.
பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ்.பூஜாவின் தாய் கைது..!!
144