Tuesday, July 16, 2024
Home » பெண் தாதா எழிலரசி காரைக்காலில் நுழைய தடை

பெண் தாதா எழிலரசி காரைக்காலில் நுழைய தடை

by MuthuKumar

காரைக்கால்: பிரபல புதுச்சேரி பெண் தாதா எழிலரசி காரைக்காலில் நுழைய தடை விதித்து கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. காரைக்கால் திரு.பட்டினத்தை சேர்ந்த ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி. பிரபல பெண் தாதா. இவருக்கும் ராமுவின் முதல் மனைவி வினோதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராமு சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

அவருடன் சென்ற எழிலரசி படுகாயம் அடைந்து தப்பினார். இதைத்தொடர்ந்து ராமு கொலைக்கு பழிக்கு பழியாக ராமுவின் முதல் மனைவி வினோதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்ட சிலரை எழிலரசி கூலிப்படையை வைத்து கொலை செய்தார். மேலும் சிலரை கொலை செய்வேன் என எழிலரசி எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எழிலரசியால் திரு.பட்டினத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என திரு.பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் மாவட்ட சார்பு கோட்ட நீதிபதிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் பேரில், நீதிபதி ஜான்சன் எழிலரசி மற்றும் அவரது கணவராக கருதப்படும் விக்ரம் ஆகியோர் ஜூன் 13(நேற்று) முதல் இரண்டு மாதத்திற்கு காரைக்காலில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You may also like

Leave a Comment

4 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi