வாஷிங்டன்: 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, டெஃப்லான் சீல் பாதிப்பு உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்த பிறகே சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியும். போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்வெளி ஓடத்துக்கு பதில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் ஒடம் மூலம் பூமிக்கு திரும்புவார் என நாசா விளக்கம் அளித்துள்ளது.