Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் விரக்தி 5 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை: பூந்தமல்லி அருகே பரபரப்பு

சென்னை: மனைவி வேறு ஒருவருடன் சென்றதால், 5 வயது மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் வாணியர் தெருவை சேர்ந்தவர் மோகன் (32), கார்பென்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பரிமளா (28). இவர்களது மகள் நட்சத்திரா (5). இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து மோகனும், அவரது மகளும் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை நட்சத்திரா வாயில் நுரை தள்ளியபடியும், மோகன் தூக்கில் தொங்கியபடியும் சடலமாக கிடந்தனர்.

போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், மோகனின் மனைவி பரிமளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. நேற்று மனைவி பரிமளா இருக்கும் இடத்திற்கு சென்ற மோகன், சண்டையிட்டு மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மோகன், மகள் நட்சத்திராவிற்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.