டெல்லி: அப்பா இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் என ராஜிவ் காந்தி நினைவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். உங்கள் போதனைகள் உத்வேகம் அளிக்கிறது; உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன். இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம், நல்லெண்ணத்தின் சின்னம் என ராஜிவ் காந்திக்கு ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.