திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜ தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டி: பாமக அரசியல் கட்சி பிரச்னை, தந்தை, மகனுக்கான பிரச்னை. இதில், நாங்கள் கருத்து சொல்ல முடியாது. கூட்டணி குறித்து கருத்து வேறுபாடு என்றால், அதற்கு நாங்கள் பேச முடியாது. தேர்தல் வரும் சமயத்தில் அந்தந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.
யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை எல்லாம் அந்த கட்சியினர் தான் முடிவு செய்ய வேண்டும். நான் தேர்தல் கமிஷன் இல்லை. தேர்தல் வரும் சமயத்தில் அந்தந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அவர்கள் உள்ளனர். அதில், எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கட்டத்திற்கு இதனை எவ்வாறு எடுத்து செல்கிறார்கள் என்பது பாஜவுக்கு தெரியாது. அவர்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.