பொன்னேரி: பொன்னேரி அருகே வேலைக்கு சென்ற மகன் காணாமல் போனதால் அவரது தந்தை கண்டு பிடித்து தரும்படி போலீசில் புகார் அளித்துள்ளார். பொன்னேரி அடுத்த காட்டாவுரை சேர்ந்தவர் அர்ஜுன். இவரது மகன் அசோக்(26). இவர் பொன்னேரி அடுத்த பழவேற்காடு செல்லும் சாலையில் உள்ள உப்பளம் பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
எனவே, அசோக்கின் தந்தை, வேலை செய்யும் இடத்திற்கு சென்று தன் மகனை குறித்து விசாரித்தபோது காணாமல் போன அன்று வேலைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அசோக்கை குறித்து அவரது நண்பர்கள், தங்கள் உறவினர்கள் வீடு என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, அசோக்கின் தந்தை தன் மகன் மாயமானது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இது குறித்து, இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து வேலைக்கு சென்ற மெக்கானிக் அசோக் எங்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி தீவிரமாக ேதடி வருகின்றனர்.