Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தந்தை பெரியார் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்து தெரிவித்துள்ளார்.  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர்க்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2024ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைக்கலாம்.

தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2024ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர் சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.