வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (30). இவர் நேற்று தனது மனைவி பத்மாவதி (26), மைத்துனி பானுமதி(21), மகள்கள் மோகன ஸ்ரீ(7), சுபாஷினி(5) ஆகியோருடன் வந்தவாசி அருகே உள்ள குலதெய்வ கோயிலான வெடால் பச்சையம்மன் கோயிலுக்கு ஒரே மொபட்டில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மொபட்டை பானுமதி ஓட்டி வந்தார். கீழ்சாத்தமங்கலம் கூட்டு சாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக வளைவில் உள்ள சாலையோர தடுப்பில் மொபட் அதிவேகமாக மோதியது. இதில் மொபட்டில் இருந்த அனைவரும் 5 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜசேகர், பானுமதி, சிறுமி மோகனஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பத்மாவதி, சுபாஷினி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பு சுவரில் மொபட் மோதி தந்தை, மகள் உள்பட 3 பேர் மரணம்
previous post