விருத்தாசலம்: பெரம்பலூர் மாவட்டம் ஒகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை(60). இவர் நேற்றுமுன்தினம் தனது இளைய மகள் தேவியை திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் எம்எஸ்சி படிப்பில் சேர்க்க அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து தேவி மற்றும் மூத்த மகள் பழனியம்மாளுடன்(31) ஊர் திரும்ப விழுப்புரம் பாசஞ்சர் ரயிலில் ஏறினார். இரவு 9 மணி அளவில் அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையத்தில் 3 பேரும் இறங்கி தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். தேவி மறுபுறம் சென்றுவிட, பிச்சைபிள்ளையும், பழனியம்மாளும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நிஜாமுதீன்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.