சென்னை: வழக்கறிஞரான தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகனுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வழக்கறிஞர் மணிமாறனை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள அவரது அறைக்கு வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். தந்தையை கொலை செய்ய முயற்சித்த மகன் ராஜேஷ் மீது உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் 2016-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.