புதுடெல்லி: விவசாயிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து நடிகை கங்கனா விளக்கம் அளித்தார். பிரபல நடிகை கங்கனா ரனாவத் தற்போது இமாச்சல் மாநிலம் மண்டி ெதாகுதி பா.ஜ எம்பியாக உள்ளார். அவர் விவசாயிகள் போராட்டம் குறித்தும், விவசாயிகள் குறித்தும் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் பா.ஜவுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கங்கனா ரனாவத் எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பா.ஜ தேசிய தலைவரும், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டாவை, நடிகை கங்கனா சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகள் குறித்த சர்ச்சை கருத்து குறித்து அவர் விளக்கம் அளித்தார்.