சென்னை: விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். திருவண்ணாமலை, செய்யாறு பகுதி விவசாயிகளின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட்டுக்காக 3300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.