காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொள்ள இருப்பதால் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும், பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள், உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.