*தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிதி உதவி
நாகர்கோவில்: குமரி மாவட்டம் தாழக்குடி வீரகேரளப்பநேரி குளத்திலிருந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தெற்கு மடை வழியாக சென்று வந்தது. இதன் வாயிலாக தாழக்குடி பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக தெற்கு மடையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பிறகு விவசாயிகள் மாற்றுப்பாதையில் மறுகால் வழியாக தண்ணீர் பாசனத்திற்கு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடையை திறந்து சரி செய்திட உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் ஒன்றிணைந்து தெற்குமடையை சரி செய்ய முடிவு செய்தனர். அதன்படி தாழக்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரூ.1 லட்சம் நிதி திரட்டி இப்பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த பணிகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டார். தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை இப்பணிகளுக்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுடன் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தாழக்குடி பேரூர் செயலாளர் பிரம்மநாயகம், தாழக்குடி முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரோகிணி, தாழக்குடி முன்னாள் பேரூர் செயலாளர் அய்யப்பன் உடன் சென்றனர்.