Wednesday, February 21, 2024
Home » ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதால் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதால் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

by Lakshmipathi

*240 நாட்களில் 15 முதல் 20 டன் வரை மகசூல்

கிருஷ்ணராயபுரம் : மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு நிலம் சீரமைத்தல், மரவள்ளிக்கிழங்கு குச்சி, நடவு செய்யும் கூலி, களை எடுத்தல் உட்பட ரூ.30 ஆயிரம் செலவுகள் செய்யப்படுகிறது. இதில் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டப்படலாம் என கூறப்படுகிறது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகிறது. இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு \”இனிப்பு\” மரவள்ளி, \”கசப்பு\” மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது.

மரவள்ளிக் கிழங்கை மூலப்பொருளாகக்கொண்டு இயங்கும் ஜவ்வரிசி ஆலைகளும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளும் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ளன. கடந்த காலங்களில் 400 ஆலைகள் இயங்கிய நிலையில், தற்போது 200 மட்டுமே இயங்கி வருகின்றன. வாகன எரிபொருளான எத்தனால் தயாரிப்பதற்கு இது ஏற்றது. இந்தோனேசியா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக்குடன் மரவள்ளி ஸ்டார்ச்சை கலந்து எளிதில் மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை (Bio Degredible Plastic) தயாரிப்பது நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில், கொல்லிமலை, கல்வராயன் மலை, தாளவாடி போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மலைவாழ் மக்கள் இதை மானாவாரியில் சாகுபடி செய்கின்றனர். மரவள்ளிக் கிழங்கின் விலை சீராக இருப்பதில்லை. ஒரு டன் கிழங்கு விலை ரூ.10,000 வரை விற்கும். இதில் ஆதாயம் பெறுவோர் பெரும்பாலும் இடைத்தரகர்களே. மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 32 சதவீதம்வரை ஸ்டார்ச் இருக்கும்.

களி மண் வகைகளில் மரவள்ளி சாகுபடி செய்தல் கூடாது. எனெனில் கிழங்கு வளர்ச்சி குன்றி குறைந்த கிடைக்கும். எனவே மணற்பாங்கான இரும் பொறை மண் வகைகளில் சாகுபடி செய்தல் சிறந்ததாகும்.மரவள்ளி, சேகோ ஆலைகளில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு பட்டைகளை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாமா? அவ்வாறு கிடைக்கும் கிழங்கு பட்டைகளை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்தும் போது அதனின் உள்ள நஞ்சு பொருள் (ஹரோசைனிக் அமிலம்) அழிக்கப்பட்டு கால்நடைகளுக்கு எந்தவித தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை.

எனது மரவள்ளி வயலில் பெரும்பாலான செடிகளில் இலைகள் சுருங்கியும், வெளிறிய நிறத்துடனும் காணப்படுகின்றது. இது நன்மையா? தீங்கு ஏற்படுத்துமாயின் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?இலைகளின் சுருக்கமானது மரவள்ளியின் ரைவஸ் நோய் தாக்குதலாகும் இந்நோய் வெள்ளை ஈகள் மூலம் பரப்பப்படுகின்றது. எனவே முதற்கட்டமாக வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 2மிலி/ லிட்டர் தெளிக்க வேண்டும். மேலும் நடவின் போது நோய் தாக்கப்படாத செடிகளிலிருந்துகருணை எடுத்து நடவு செய்ய வேண்டும்.
அறுவடை காலம் இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவையே அறுவடைக்கான அறிகுறியாகும். மகசூல் 240 நாட்களில் எக்டருக்கு 15-20 டன் கிழங்குகள் வரை கிடைக்கும்.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi