Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

விவசாயிகள் வருவாய் பெருக்கும் விதமாக கால்நடை விற்பனைக்காக இணையதளம் உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: விவசாயிகள் நலன் கருதி வருவாய் பெருக்கும் விதமாக கால்நடை விற்பனைக்காக இணையதளம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்க சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும். இந்த இணையத்தளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம், உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் அறிந்து கொள்ள இயலும். இத்தகவல் மூலம் உரிய விலைக்கு கால்நடைகளை விற்று விவசாயிகளுக்கு பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இப்பணிகளை தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும்.