தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வடக்கு பீட்டில் கடந்த 29ம் தேதி 15 வயது ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறையினர் விசாரணையில், சென்னமாளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமல்லேஷ்(34) என்பவர் விவசாய நிலத்தில் ராகி பயிரை அடிக்கடி யானைகள் நாசப்படுத்தியதால் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் யானை உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, முத்துமல்லேசை வனத்துறையினர் நேற்று கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பணியில் கவனக்குறைவாக இருந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் முரளிதரனை, ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி சஸ்பெண்ட் செய்துள்ளார்.