சென்னை: வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அனைத்துத் துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்புத் துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாகச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் திட்டங்களையும் எடுத்துக்கூறி அவர்கள் பயன்பெறும் வகையில், மாதம் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும். மொத்தமுள்ள 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவரைத் தேடி வேளாண்மை திட்டம்: 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும்
0