சென்னை: சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்வதற்கு கடந்த 17ம் தேதி நண்பருடன் சென்னை -பெங்களூரூ நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இது தொடர்பாக சென்னையில் பதுங்கி இருந்த வாசனை பாலுசெட்டி சத்திரம் போலீசார் 4 பிரிவின் கீழ் கைது செய்தனர். அவரை் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வாசன் கையிலும் இடுப்பிலும் வலி இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் கூறினார். அதன்படி, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.