திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஜூத்தாடா பகுதியை சேர்ந்தவர் அப்பலராஜூ. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பொம்மிடி ரமணா. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பொம்மிடிரமணாவின் வீட்டிற்குள் சென்ற அப்பலராஜூ, வீட்டில் இருந்த பொம்மிடிரமணா(63), உஷாராணி(35), அல்லூரி ரமாதேவி(53), நக்கெல்லா அருணா(37), பொம்மிடிஉதய்(2) மற்றும் 6 மாத குழந்தை உர்விஷா ஆகியோரை சரமாரியாக வெட்டி கொன்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரை வெட்டிக்கொலை செய்த அப்பலராஜுவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை
0
previous post