செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குடும்ப தகராறு காரணமாக மதுபோதையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு பெரியநத்தம் கங்கையம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் விஜய் (28), ஜூவீதா தம்பதியினர். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டநிலையில் விஜய் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் மாங்காய் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஜய் மது அருந்துவிட்டு வீட்டிற்க்கு வருவதால் குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை பெற்றுகொள்ள ஜூவீதா தனது கணவர் விஜய்யை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார். ஆனால், விஜய் அழைத்து செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து, மது அருந்துவிட்டு மதுபோதையில் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


