சென்னை: தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு ஒரு தணிக்கை அமைப்பு தானே?; இதில் என்ன தவறு என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக ஊடக தளங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறியும் வகையில் அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.