
கூடுவாஞ்சேரி: தஞ்சாவூர் எம்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (62) செக்யூரிட்டி. இவர் தாம்பரம், ரங்கநாதன் தெருவில் தங்கி, வண்டலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனியார் கம்பெனிக்கு வந்த லாரி டிரைவர் கேட்டை திறக்கும்படி கூறினார். இந்நிலையில் மோகன் கேட்டை திறக்க மறுத்ததால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கேட்டை இடித்து கொண்டு உள்ளே சென்றதாகவும், அப்போது கேட் இடிந்து செக்யூரிட்டி மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.