புதுடெல்லி: மும்பையை சேர்ந்த துணி வியாபாரம் செய்யும் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.22 கோடி கடன் பெற்றது. 2012ம் ஆண்டில் அது ரூ.24.20 கோடிக்கு கடன் பாக்கி வைத்திருந்தது. இதற்கிடையே, வங்கியின் கணக்கு தணிக்கையின் போது, மும்பை நிறுவனத்தின் இயக்குநர்கள் ரிங்கு படோடியா மற்றும் அனிதா படோடியா ஆகியோர் 17 போலி நிறுவனங்கள் மூலமாக ரூ.24 கோடி கடன் தொகையை தங்களின் உறவினர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ தற்போது மும்பை நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.