புதுடெல்லி: சிபிஎஸ்இ நேற்று வெளியிட்ட அறிக்கையில், சில இணையதளங்கள் 2024-2025ம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், செயல்முறைகள் குறித்து காலாவதியான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத தகவல்கள் அனைவரையும் தவறாக வழிநடத்தலாம். மேலும் பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இணையதளங்களில் பரவும் போலியான தகவல்கள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பாடத்திட்டம் குறித்து போலி தகவல்: மாணவர்கள், பெற்றோருக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை
60