சென்னை : முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பண மோசடிக்கு முயற்சித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். டிஐஜி திருநாவுக்கரசு புகாரில் ஹனீப் கான், வஷித் கான் ஆகியோரை சைபர் கிரைம் கைது செய்தது.