சென்னை: போலி பணி நியமன ஆணை கொடுத்து நூதன மோசடியல் ஈடுபட்ட பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், உடந்தையாக இருந்த ஜோஷிதா கைது செய்யப்பட்டனர். குப்பை தொட்டிகளை போட்டோ எடுப்பதுதான் வேலை எனக்கூறி வெங்கடேஷக்கு 2023ல் போலி நியமன ஆணை வழங்கி உள்ளனர். மாநகராட்சியில் உதவி ஆணையர் பதவி உயர்வு வாங்கி தருவதாக நம்பவைத்து வெங்கடேஷிடம் ரூ.14 லட்சம் பறித்துள்ளனர்.
உதவி ஆணையர் அலுவலகம் ஒதுக்காததால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ், மாநகராட்சியில் விசாரணை செய்தார். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து விசாரித்தபோது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெங்கடேஷ் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், தலைமறைவாக உள்ள லதா மற்றும் கௌரி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.