சென்னை: திருவள்ளூரில் நடந்த பாஜ நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போட்டித் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்தாலும் சோர்வு அடையாமல், மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் உயிரிழப்புகளை எக்காரணம் கொண்டும் நீட்டுடன் தொடர்புபடுத்தி அரசியல் ஆக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.