தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் ஹார்பர் எக்ஸ்பிரஸ் ரோட்டில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஹரிகரன் (23) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் 3 மணியளவில் அமோனியா பிளான்டில் பைப்லைன் கசிவை ஊழியர்கள் சரி செய்யும் போது திடீரென அதிகப்படியான அமோனியா கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஹரிஹரன் தீக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கு பணியில் இருந்த தனராஜ் (37), மாரிமுத்து (24) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.