சென்னை: ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து சீராக இருக்க வேண்டும்; மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தப்படாது; போக்குவரத்து மாற்றப்படும். மருத்துவமனை செல்வோருக்கு எந்த இடையூறும் இருக்காது தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.