சென்னை: சென்னையில் நடைபெற உள்ள பார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை விரைந்து விசாரிக்கும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என கூறி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சாலைகளை மறித்து கார் பந்தயம் நடத்தப்படுகிறது, பல்வேறு இடையூறுகளை போட்டி ஏற்படுத்துகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.