சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 24 மணி நேரம் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அழைப்புகள், பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காவிரி கரையோர மாவட்டங்களில் செய்யப்பட்ட முன்னேற்பாடு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.