திருமலை: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் சந்திரபாபுவுக்கு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது கண்புரை அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்தனர்.