Tuesday, July 23, 2024
Home » TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!

by Porselvi

டெல்லி : TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை இந்தியா தயாரித்துள்ளது. SEBEX 2 இந்திய கடற்படையின் பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆயுத உற்பத்தி, போர் கப்பல், போர் விமானம், ஏவுகணைகள் ஆகியவற்றை தாண்டி தற்போது வெடி மருந்து துறையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. நாக்பூரைச் சேர்ந்த எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடட் என்ற நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் SEBEX 2 என்ற ஆற்றல் மிக்க வெடி மருந்தை உருவாக்கி உள்ளது.

TNT எனப்படும் வெடிமருந்தை விட SEBEX 2 2 மடங்கு அதிக சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஒரு கிலோ TNT வெடி பொருள் பயன்படுத்தும் இடத்தில் SEBEX 2 வெடி பொருளை 500 கிராம் பயன்படுத்தினால் அதே அளவிலான தாக்கத்தையும் அழிவினையும் ஏற்படுத்திவிட முடியும் என்று கூறப்படுகிறது. SEBEX 2 வெடி மருந்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது. SEBEX 2 வெடிமருந்து மூலம் இந்திய பாதுகாப்புத் துறையின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

You may also like

Leave a Comment

eleven − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi