சென்னை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.