Saturday, February 24, 2024
Home » எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் குடியரசு தின காவல் அலங்கார ஊர்தி பற்றி பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் குடியரசு தின காவல் அலங்கார ஊர்தி பற்றி பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

by Ranjith

சென்னை: எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகத்தில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்ற காவல் அலங்கார ஊர்தியின் சிறப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு இணை கமிஷனர் தர்மராஜன் மற்றும் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் எடுத்துரைத்தனர். தமிழ்நாட்டில் சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு காவல் அலங்கார ஊர்தி, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்க்கும் வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஊர்தியை சந்தோம் புனித பீட்ஸ் அகாடமி பள்ளி, எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி, பட்டினப்பாக்கம் ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் நேற்று நேரில் கண்டு ரசித்தனர். மாணவர்களுக்கு மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர் தர்மராஜன் மற்றும் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தோஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர், அலங்கார ஊர்தியில் இடம்பெற்றுள்ள,‘ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு, பருந்து செயலி, நிவாரணம் செயலி, மூத்த குடிமக்களுக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள பந்தம் திட்டம் ,

வீரா வாகனம் மற்றும் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்களின் 50வது ஆண்டு சிறப்பு’ ஆகியவவை குறித்து விளக்கி கூறினர். அப்போது மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து, புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.  குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகளில் இரண்டாது பரிசை காவல்துறை அலங்கார ஊர்தி பெற்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi