புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஆக.29-ம் தேதி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ஆக.29-ல் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.