ஐ.ஐ.டி., ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் குறித்து தவறாக விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு!!
சென்னை : ஐ.ஐ.டி., ஜே.இ.இ. தேர்வு முடிவுகள் குறித்து தவறாக விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் குறித்து தவறான வகையில் விளம்பரம் செய்யக் கூடாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.


