ஆவடி: ஆவடி தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். கோவர்த்தனகிரி பாரதி நகரை சேர்ந்தவர் கனகராஜ்(45). இவரது மகன் தேவா(16). இவர், தனியார் பள்ளியில் வணிகவியல் 12ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த மாதம் தேர்வு எழுதிய நிலையில் நேற்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேவா, தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என இரண்டு பாடப்பிரிவுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் தேவா வீட்டில் தாய் மற்றொரு அறையில் இருந்த நிலையில் தேவா தன்னுடைய அறையில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவடி போலீசார் சடலத்தை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.