கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் நா.த.க. நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்தது. கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை நள்ளிரவில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. ஏற்கனவே பாலியல் வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.சி.சி. முகாமில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.