தூத்துக்குடி: மதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (63). இவர், கடந்த 2009 முதல் 2011 வரை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். அப்போது புதுக்கோட்டை தேரி ரோட்டைச் சேர்ந்த, வெளிநாட்டில் வசித்து வந்த கிருபாகரன் சாம் என்பவருக்கு, புதுக்கோட்டையில் உள்ள நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயக்குமார், கிருபாகரன் சாமிடம் ரூ3 லட்சம் லஞ்சமாக கேட்டு, ரூ50 ஆயிரத்தை 16.12.2011 அன்று வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் விசாரித்து ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.