திருவள்ளூர்: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக நிரப்பப்படும் இசிஜி டெக்னீஷியன் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவிகிதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 காலி பணியிடங்கள் இனசுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓசி பிரிவிற்கு 50 வயது உச்ச வரம்பு எனவும் மற்ற பிரிவினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.