டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சர்கள் உத்தரவின்பேரில் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்து வருகின்றனர்.
கடந்த 4ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் வியாபாரி ஷாயோன் கொல்லப்பட்டதாக அவரது உறவினர் முஜிபுல் ஹூசைன் என்பவர் டாக்கா சீனியர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்துள்ளார். பிரதமர் ஹசீனா மற்றும் 46 பேருக்கு எதிராக அவர் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரை பதிவு செய்த நீதிமன்றம் அசுலியா காவல்நிலையம் இது குறித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஹசினாவுக்கு எதிராக இதுவரை மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 28 கொலை வழக்குகளாகும்.