ராமநாதபுரம்: தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான சான்று வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாவது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், பயிர் காப்பீடு பதிவு செய்தல் தொடர்பாக வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக விவசாய பாசன நிலத்திற்கான அடங்கல் நகல் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடங்கல் நகல் வழங்கும்பொழுது கையூட்டு பெறுவதாக தொடர் புகார்கள் தொலைபேசி மூலமாக வரப்பெற்றுள்ளது. ஆதாரத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடங்கல் நகல் வழங்குவதற்கு பணம் பெற்றதற்காக அரசு அலுவலர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .
மேலும் அடங்கல் நகல் வழங்கும்பொழுது முறைகேடுகள் ஏதும் நடைபெறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.