சென்னை: கருத்துசொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு; அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சனாதனம் பற்றிய உதயநிதியின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பதில் அளித்துள்ளார். சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. வாக்குவங்கி அரசியலுக்காக சனாதன ஒழிப்பு பற்றி திமுக பேசுவதாக அமித் ஷா குற்றஞ்சாட்டியிருந்தார். மூட நம்பிக்கையற்ற மதம் வேண்டும் என விவேகானந்தரே கூறியுள்ளார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்தை ஆதரிக்கிறேன்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் ஒழிப்பு மாநாடு என நடைபெற்ற அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி அண்மையில் தனது விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், சனாதன கொள்கை பற்றி திமுக அமைச்சர் உதயநிதி பேசியதற்கு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்து வந்தன.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், சமதர்ம சமன்பாடு என்பதே காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு. எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. அனைத்து மத நம்பிக்கையையும் மதிக்கிறோம் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளித்துள்ளார்.