ஐரோப்பா: ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வரும் வெயிலால் பொதுமக்கள் பகல் நேரங்களில் நீநிலைகளை தேடி ஓடிவரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்பம் தாக்குவதால் பொதுமக்களுக்கு வெப்பவாத பாதிப்பு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி முழுவதும் அதீத வெப்பம் நிலவுவதால் மொத நாளே பெருமூச்சு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆண்டு வழக்கத்திற்கு மாறாக 30 டிகிரி செல்சியத்திற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் கடற்கரைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்த பாரிஸில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சுட்டெரிக்கிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அங்குள்ள செயின் ஆற்றில் பகல் பொழுதை கழிகின்றன. 38டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெப்பம் தாக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் பாரிஸில் அந்த அளவை தாண்டி வெப்பம் சுட்டெரிக்கிறது.
இதனால் பாரிஸ் மண்டலத்தில் அதீத வெப்பத்திற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின், கிரீஸ் நாடுகளிலும் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியத்தை தாண்டியுள்ளது. பிரிட்டனில் நேற்று இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாளை அந்நாட்டு மக்கள் அனுபவித்தனர். இத்தாலியிலும் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியத்தை தொட்டு வருவதால் பொது வெளியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளில் குளியலிட்டு பொதுமக்கள் தங்களை குளிர்வித்து கொள்கின்றனர்.