கத்தார்: உளவு பார்த்த புகாரில் கத்தாரில் கைதான இந்திய கடற்படையில் பல்வேறு பொறுப்பிகளை வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கத்தாரில் இஸ்ரேல் நாட்டுகாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கேப்டன் நவ்தேஜ் சிங்க் கில், வீரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஸ்ட், அமித் நாக்பால், புரந்தேடு திவாரி, சுகுணாகர் பகலா, சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது.
8 பேரும் கத்தாரில் உள்ள டாக்ரா குளோபல் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யபட்டு கத்தாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது.
8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அதிர்சியளிப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் விரிவான தேர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசி வருவதாகவும் அரசுதரப்பில் விளக்கமளிக்கபட்டுள்ளது