சென்னை: இஎஸ்ஐ காப்பீட்டாளர்களின் பிள்ளைகள் காப்பீட்டாளர் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி கடைசி நாள் என இஎஸ்ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இஎஸ்ஐ சென்னை மண்டல இயக்குநர் வெளியிட்ட அறிக்கை அறிக்கை: செவிலியர் கல்லூரிகளில் இஎஸ்ஐ காப்பீட்டாளருக்கான ஒதுக்கீட்டின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இஎஸ்ஐ காப்பீட்டாளர்களின் பிள்ளைகள் காப்பீட்டாளரின் வாரிசு என்ற சான்றிதழ் பெறுவதற்கு www.esic.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகம், துணை மண்டல அலுவலகம் அல்லது மண்டல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.